53. எல்லாம் நாங்களே | WE ARE EVERYTHING
Description
அப்பா, காலார வெளியேசென்று
உலவிவருகிறேன் எனக்கேட்டால்
கரடியாகக் கத்துவதேன்?
காலடிஎடுத்து வைத்தால்காலை
உடைப்பேன் கழுதைஎன்பதேன்?
அடுப்பங் கரைக்கும் முன்புறத்து
அறைக்கும் இருமுறை போய்வந்தால்
புனுகுபூனை போலவே நீ
போவதும் வருவதும் ஏனோஎன
அம்மா திட்டுவது ஏன்?
கேள்விகள் ஏதும் போரடிக்கும்போது
கேட்டால் உடன்பிறப்பு
ஆத்திரமுடனே எனை பார்த்துஅடிகள்
எத்தனைகிடைத்தாலும் வலிக்காதோ
எனகாண்டாமிருகமாய் கத்துவதேன்?
சீப்பைக் காணோம் என்றாலோ,
சிடுசிடு எனதாத்தா என்னிடம்
எங்கே ஒளித்தாய் குரங்கேஎன
தேடாமல் தடதடவெனதவித்துக்
கேட்டுக் கொண்டிருப்பதேன்?
கணக்குப் போடும்ஆச்சியிடம்
கருத்துடன் உதவமுன்சென்றால்
உனக்கு என்னதெரியும்?
கணக்கில் புலியோஎன
சீறுவதுதான் எதற்கு?
கரடி, காண்டாமிருகம், கழுதை,
குரங்கு, பூனை, புலிஎன
கிட்டத்தட்ட காட்டுமிருகம்எல்லாமே
என்இல்லத்தில் என்றால்
நானொன்று உங்களுக்கு சொல்கிறேன்…..























